வாரணாசியில் சிக்கியுள்ள 22 தமிழர்கள் கதி என்ன? புதுச்சேரி முதல்வர் உதவ கோரிக்கை!

26 March 2020, 9:46 pm
Narayanasamy updatenews360
Quick Share

ஆன்மிக யாத்திரை சென்று வாரணாசியில் தவிக்கும் புதுச்சேரியைச் சேர்ந்த 22 பேரை பாதுகாப்பாக சொந்த ஊருக்கு அழைத்து வர, புதுச்சேரி முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு சத்யா நகரை சேர்ந்த 22 பேர், கடந்த 19ம் தேதி புனிய யாத்திரையாக, வாரணாசிக்கு ரயிலில் சென்றனர். புதுக்சேரிக்கு திரும்ப, அவர்கள் அனைவரும் வரும் 29ம் தேதி ரயிலின் முன்பதிவு செய்திருந்தனர்.

உத்திரப் பிரதேச மாநிலம் வாரணாசிக்கு, கடந்த 21ம் தேதி அதிகாலை பக்தர்கள் 22 பேரும் சென்றனர். இதற்கிடையே, கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

விமானம், ரயில் உள்ளிட்ட எந்த போக்குவரத்து சேவையில் இல்லாததால், அவர்கள் கடந்த ஒரு வாரகாலமாக அங்குள்ள விடுதியின் ஒரு அறையில் தங்கியுள்ளனர். அங்கு, உணவு உள்ளிட்ட எந்த வசதியுமின்றி அவர்கள் தவிப்பதாக, உறவினர்கள் கவலையோடு தெரிவித்தனர்.

ஆன்மிக யாத்திரை சென்றவர்களை பாதுகாப்பாக மீட்டு புதுச்சேரி கொண்டு வர, முதல்வர் நாராயணசாமி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வாரணாசியில் சிக்கியுள்ளவர்களுக்கு உணவு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பாதுகாப்பாக புதுச்சேரி அழைத்து வர நடவடிக்கை எடுப்பதாக, முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply