இணையத்தில் லீக்கான பொன்னியின் செல்வன் டீசர் : படக்குழுவினர் அதிர்ச்சி..!!!

Author: Udayachandran RadhaKrishnan
8 July 2022, 5:47 pm
Ponniyin Selvan Leaked -Updatenews360
Quick Share

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிகப் பெரிய பொருட் செலவில் பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாகி வருகிறது. படம் மொத்தம் இரண்டு பாகங்களாக வெளியாகிறது. தற்போது முதல் பாகம் வெளியீட்டிற்குத் தயாராகி உள்ளது. வரும் செப்டம்பர் 30-ம் தேதி படத்தின் முதல் பாகம் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் இந்தப் படத்தைத் தயாரித்து வருகின்றனர். எழுத்தாளர் ஜெயமோகனும் இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்.

இன்று மாலை 6 மணிக்கு படத்தின் டீசர் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஹிந்தியில் அமிதாப்பச்சனும், தமிழில் சூர்யாவும், தெலுங்கில் மகேஷ்பாபுவும், மலையாளத்தில் மோகன்லாலும், கன்னடத்தில் ரக்ஷித் ஷெட்டியும் டிஜிட்டல் முறையில் டீசரை வெளியிடுகின்றனர்.

மேலும் படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று மாலை 6:00 மணிக்கு சென்னை டிரேட் சென்டரில் நடைபெறுகிறது. அதில் படக் குழுவினர் மற்றும் பத்திரிகையாளர்கள் என பலர் கலந்து கொள்கின்றனர்.

இந்த நிலையில் டீசர் பரிசோதிக்கும் போது யாரோ வீடியோவாக எடுத்து லீக் செய்துள்ளனர். தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Views: - 136

0

0