வாதத்துக்கு மருந்துண்டு, விதண்டாவாதத்துக்கு மருந்தில்லை : காங்., குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 March 2021, 5:16 pm
Pon Radhakrishnan
Quick Share

கன்னியாகுமரி : குமரி சரக்கு பெட்டக துறைமுக விவகாரத்தில் வாதத்துக்கு மருந்து உண்டு விதண்டாவாதத்துக்கு மருந்து கிடையாது என பொன் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் முன்னாள் மத்தியமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் மற்றும் நாகர்கோவில் சட்டமன்ற பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி ஆகியோர் நாகர்கோவில் தொகுதிக்குபட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.

முன்னதாக அவர்கள் வடசேரி சோழவந்தார் கோயிலில் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் வடசேரி, ஓட்டுப்புரைதெரு,”ஒழுகினசேரி,கோதைகிராமம் போன்ற பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது சரக்கு பெட்டக மாற்று துறைமுகம் குறித்து குமரி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் பிரதமர் மோடி சரக்கு பெட்டக மாற்று முனையம் சம்மந்தமாக ஏதாவது அறிப்பு வெளியிட வாய்புள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த பொன்.ராதாகிருஷ்ணன் வாதத்துக்கு மருந்து உண்டு விதாண்டா வாதத்துக்கு மருந்து இல்லை எனவும் காங்கிரஸ் கட்சி 2019 ஆண்டு எப்படி பொய்சொல்லி வெற்றிபெற்றார்களோ அதைபோன்று வெற்றியை இந்ததேர்தலிலும் மீண்டும் பெறவேண்டுவதற்க்காக அவர்களுக்கு புதிய ஆயுதம் எதுவும் கிடைக்கவில்லை.

புதிய சாதனைகள் எதுவும் சொல்லமுடியவில்லை ஆகையால் பழைய ஆயுதம் துருப்பிடித்த ஆயுததத்தை எடுத்து பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறார்கள். தேர்தல் பிரச்சாரத்தில் துறைமுக விஷயத்தில் முதல்வர் சொன்னவிஷயங்களும் நான் சொன்ன விஷயங்களும் எல்லாருக்கும் தெரியும் .இதற்க்கு மேல் விளக்கம் ஏதுவும் கொடுக்கமுடியாது எனவும் கூறினார்.

Views: - 84

0

0