தாரகையின் தாரக மந்திரம் “தன்னம்பிக்கை“.! குடியுரிமை தேர்வில் வெற்றி பெற்ற பார்வை மாற்றுத்திறனாளி.!!

5 August 2020, 3:31 pm
Poorana Sundhari - Updatenews360
Quick Share

மதுரை : குடியுரிமை தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்த பார்வை மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்திய ஆட்சிப் பணித் தேர்வான சிவில் சர்வீஸ் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் தமிழகத்தில் நாகர்கோவிலைச் சேர்ந்த கணேஷ்குமார் பாஸ்கர் என்ற மாணவர் முதலிடத்தை பிடித்தார். இந்த தேர்வில் பார்வை மாற்றுத்திறனாளியான பெண் சாதனை படைத்துள்ளார்.

மதுரை சிம்மக்கல் பகுதியை சேர்நத் முருகேசன்-ஆவுடைதேவியின் மகளான பூரண சுந்தரி ஒரு பார்வை மாற்றுத்திறனாளி. 5 வயதில் பார்வையை இழந்த பூரண சுந்தரி, 10ஆம் வகுப்பில் 471 மதிப்பெண்களும், 12ஆம் வகுப்பில் 1092 மதிப்பெண் பெற்று கல்லூரியில் ஆங்கில இளங்கலை முடித்துள்ளார்.

குடும்பத்தினர் பொருளாதார நெருக்கடியை சந்தித்து தன்னை படிக்க வைத்துள்ளதால், அரசு வேலையில் சேர வேண்டும் என்ற எண்ணத்துடன் படித்தாக கூறிய அவர், தன்னம்பிக்கையே தனது தாரக மந்திரம் என்று கூறுகிறார்.

கடந்த 2016ஆம் ஆண்டு முதல் குரூப் தேர்வு, வங்கி தேர்வு, குடியுரிமை பணி என 20க்கும் மேற்பட்ட போட்டி தேர்வுகளை எழுதியும், பல தேர்வுகளில் தோல்வியை தழுவியும் தன்னம்பிக்கையை மட்டும் விடாமல் தொடர்ந்து தேர்வுகளை எழுதி வந்துள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த குடியுரிமை தேர்வை 4வது முறையாக எழுதி 296 இடத்தில் வெற்றி பெற்றுள்ள பூரண சுந்தரி, 2018ஆம் ஆண்டு நடந்த வங்கி தேர்வில் வெற்று பெற்று அரசு ஊரக வளர்ச்சி வங்கியில் கிளர்க்கா பணிபுரிந்து வந்துள்ளார்.

தற்போது கிடைத்த வெற்றியால் புதிய உத்வேகம் கிடைத்துள்ளதாக கூறும் பூரண சுந்தரி, தேர்விற்காக சென்னை உள்ளிட்ட நகரங்களில் தங்கி பயின்ற போது உடன் இருந்த நண்பர்கள் கொடுத்த உற்சாகமும் உத்வேகமும் தான் வெற்றி பெற காரணம் என்கிறார்.

சிறுவயதில் படிக்கும் போது பாடத்தை தனது தாய் சொல்லிக் கொடுத்தது மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக கூறும் பூரண சுந்தரி, பார்வை மாற்றுத்திறனாளிகள் தாங்கள் எடுக்கும் எந்த முயற்சியை எப்போதும் கைவிடாமல் விடாமுயற்சியோடு தன்னம்பிக்கையோடு தொடர்ந்தால் வெற்றி நிச்சயம் என்கிறார்.

வாழ்க்கையில் லட்சியம் என்பதே குறிக்கோள் என வாழ்ந்து, தன்னம்பிக்கையோடு தன்னை செதுக்கி, மாற்றுத்திறனாளிகளாலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியம் என சாதனை படைத்த பூரண சுந்தரிக்கு Updatenews360 பரிபூரண வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது.