14 வயதில் சொந்தமாக புதிய கார் வாங்கிய பூவையார் : வைரலாகும் கப்பீஸ் கார்… குவியும் வாழ்த்து!!
Author: Udayachandran RadhaKrishnan12 அக்டோபர் 2022, 10:19 காலை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான சிறுவன் பூவையார் என்கிற கப்பீஸ். படங்களில் நடித்து வரும் இவர் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பூவையார் தனது காருடன் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் வாய்ப்பு கிடைத்தால் பிரபலமாகி விடுவார்கள் என்பதும் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடுவார்கள் என்பதும் தெரிந்த விஷயமே.
விஜய் டிவி பிரபலங்கள் பலர் சொந்த வீடு, சொந்த கார் என மகிழ்ச்சியுடன் உள்ளனர். அந்த லிஸ்டில் தற்போது பூவையாரும் இணைந்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் பூவையார்.
அந்த நிகழ்ச்சிகள் இரண்டாவது ரன்னர் அப் ஆன பூவையார், அதன் பின்னர் ஒருசில படங்களில் பாடல்கள் பாடினார். மேலும் விஜய் நடித்த ’பிகில்’ ’மாஸ்டர்’ மற்றும் விக்ரம் நடித்த ’கோப்ரா’ உட்பட ஒரு சில படங்களில் நடித்தார்.
இந்நிலையில் பூவையார் தற்போது சொந்த கார் வாங்கியுள்ளார். தனது புதிய காருடன் உள்ள பூவையாரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தன்னுடைய 14 ஆவது வயதில் கார் வாங்கியுள்ள பூவையாருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
0
0