இணையத்தில் எல்லை மீறும் அஜித் – விஜய் ரசிகர்கள்.. கோபத்தில் பிரபலம் செய்த காரியம்..!

Author: Rajesh
27 March 2022, 11:24 am
Quick Share

சமூக வலைதளங்களில் திறந்தாலே நடிகர் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களின் சண்டையை நாம் பார்க்க முடியும். சில ஆண்டுகளுக்கு முன்பு தினமும் ஒரு ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து சண்டை அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் சண்டை போட்டுக்கொண்டே இருந்தனர். சமீபகாலமாக இந்த சண்டை குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் சமூக வலைதளங்களை சண்டையை துவங்கியுள்ளனர்.

சமீபத்தில் அஜித் நடித்த வலிமை திரைப்படம் வெளியாகிது. அவரது உடல், டான்ஸ் உள்ளிட்டவைகளை வைத்து விமர்சனங்கள் கடுமையாக இருந்தன. இருந்தபோதிலும் விஜய் ரசிகர்கள் எந்த ஒரு ஹேஷ்டேக்கையும் உருவாக்காமல் இருந்தனர்.

இந்த நிலையில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. இதனை அடுத்து அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் பீஸ்ட் திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகும் என அறிவித்தது. இதனையடுத்து ட்விட்டரில் #RIPJosephVijay ஹேஷ்டேக்கை அஜித் ரசிகர்கள் உருவாக்கி டிரெண்டிங் செய்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஜய் ரசிகர்களும் #Aids_Patient_Ajith ஹேஷ்டேக்கை உருவாக்கி அஜித் விஜய் ரசிகர்களின் சண்டை மீண்டும் தீவிரமாக நடந்து வருகிறது.

அதில் அஜித் ரசிர்கள் நடிகர் விஜயின் பீஸ்ட் படத்துடன் திரைக்கு வரும் கேஜிஎஃப்2 திரைப்படத்திற்கு சப்போர்ட் செய்தும், விஜய் ரசிகர்கள் பீஸ்ட் படத்திற்கு சப்போர்ட் செய்தும் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக்கள் தேசிய அளவில் டிரெண்டாகியுள்ளது.

முதலில் படங்களை வைத்து சண்டை போட துவங்கிய ரசிகர்கள் அதன்பின் தகாத வார்த்தைகளையும் வைத்து பேச துவங்கினார்கள். தொடர்ந்து நடந்து வரும் இந்த சண்டையால் டுவிட்டர் பக்கத்தில் பல பிரபலங்கள் கோபம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது பிரபல பேஷன் டிசைனர் வாசுகி பாஸ்கர் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்த சண்டையை நிறுத்த அஜித் – விஜய் இருவரும் அறிக்கை ஒன்றை வெளியிடுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

அஜித் மற்றும் விஜய் இருவரும் இனிமேலாவது, இதுகுறித்து நடவடிக்கை எடுப்பார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Views: - 316

1

0