பள்ளி வாட்சப் குழுவில் ஆபாசப் புகைப்படம், அரசுப் பள்ளி மாணவிகள் ஷாக் : ஆசிரியரிடம் விசாரணை!!

13 June 2021, 8:36 pm
Harrassment Whats App - Updatenews360
Quick Share

ஈரோடு : அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவிகளுக்கு வாட்சப் மூலம் ஆபாச படம் அனுப்பிய ஆசிரியரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் ஒரு வாட்ஸ் அப் குழுவை தொடங்கியுள்ளனர். அந்த குழுவில் முன்னாள் மாணவிகள், இந்நாள் மாணவிகள் வரை உள்ளனர்.

இந்த குழுவில் 6 பேர் மட்டுமே அட்மினாக உள்ளனர். கல்வி தொடர்பான தகவல் பகிரப்பட்டு வந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் பயிற்சி ஆசிரியர் எண்ணில் இருந்து அந்த குழுவில் 6 ஆபாச படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் உடனே பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்டுள்ளனர். உடனே பள்ளி நிர்வாகம், சம்மந்தப்பட்ட பயிற்சி ஆசிரியரை அழைத்து விசாரணை மேற்கொண்ட போது, செல்போன் தொலைந்து விட்டதாகவும், தான் ஆபாச படத்தை அனுப்பவில்லை என விளக்கம் அளித்தார்.

இதையடுத்து பள்ளியின் பெயரில் எந்த வாட்சப் குழுவும் இல்லை அந்த ஆசிரியர் இங்கு பணியிலும் இல்லை எனவும் ஜகா வாங்கியுள்ளனர். ஆனால் இதை ஏற்காத பெற்றோர்கள் ஈரோடு காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்தனர்.

இதையடுத்து சைபர் கிரைம் பிரிவுக்கு புகாரை அளித்ததின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பாலியல் தொல்லை தொடர்பாக ஏற்கனவே தமிழகத்தில் தனியார் பள்ளிகள் சிக்கியுள்ள சூழ்நிலையில் அரசு பள்ளி சிக்கியுள்ளது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 233

0

0