ஏப்ரல் 5ஆம் தேதி வரை தபால் வாக்குகள் பெறப்படும் : தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு!!

1 April 2021, 1:52 pm
Sathya Pratha Sahoo -Updatenews360
Quick Share

80 வயது மேற்பட்டோர்களிடம வரும் ஏப்ரல் 5 வரை தபால் வாக்கு பெறப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, கூகுள் பே, போன் – பே போன்ற ஆப்கள் மூலம் பணப்பட்டுவாடா நடைபெறுவது குறித்து தெளிவான புகாரை யாரும் அளிக்கவில்லை என கூறினார்.

எத்தனை பேருக்கு ஆப்கள் மூலம் எவ்வளவு தொகை அனுப்பப்பட்டது என்று தெளிவாக குறிப்பிட்டு புகா அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய அவர், மேலும் 80 வயது மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து வரும் ஏப்ரல் 5ஆம் தேதி வரை தபால் வாக்கு பெறப்படும் என்றும் கூறினார்.

காவல்துறை, அரசு ஊழியர்களுக்கான தபால் வாக்குகள் செலுத்த மொத்தம் 3 லட்சத்து 46 ஆயிரத்து 519 விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு அதில் 1 லட்சத்து 32 ஆயிரத்து 350 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளதாக கூறினார்.

12 டி விண்ணப்பங்கள் மட்டும் 92,559 விண்ணப்பங்கள் 80 வயது மேற்பட்டோருக்கு அளித்துள்ளதாகவும், புதிய வாக்களர்களுக்கு விரைவு தபால் மூலம் வாக்களர் அட்டை அனுப்பி வைக்கப்படுவதாகவும் கூறினார்.

Views: - 17

0

0