வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மின் விநியோகம் நிறுத்தம் : அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!!
Author: Udayachandran RadhaKrishnan8 November 2021, 9:41 am
சென்னை : பருவமழையின்போது சீரான மின்விநியோகத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் வெல்ல நீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது.
குறிப்பாக சென்னையில் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ள நிலையில், பல இடங்களில் மின்சாரமும் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்திபாலாஜி, பருவமழையின்போது சீரான மின்விநியோகத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், சென்னையில் ஒரு துணை மின் நிலையத்தில் மட்டுமே மின் உற்பத்தி நிறுத்தபட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், கனமழை காரணமாக 12,237 மின் இணைப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது என்றும், 1 லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
0
0