எத்தனை நாள் தவம்… இணைகிறது பாகுபலி ஜோடி : பிரபாஸ் – அனுஷ்கா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
29 March 2022, 1:48 pm
Prabhas Anushka- Updatenews360
Quick Share

திரையில் தோன்றி எத்தனையோ நடிகர்கள், நடிகைகளின் ஜோடி பிரமாதம் என சொல்லியிருக்கிறோம், ரீல் விட ரியலில் ஜோடி சேர்ந்தும் பார்த்துள்ளோம். அப்படி இந்த ஜோடி சேராதா என ரசிகர்கள் ஏங்கியதுண்டு.

Prabhas' Radhe Shyam makes over Rs 200 crore in pre-release business:  report | Entertainment News,The Indian Express

எதுக்கு இவ்வளவு பில்டப் என்று நினைக்காதீங்க… பாகுபலி படத்தில் ஜோடியாக நடித்த பிரபாஸ் – அனுஷ்கா ஜோடி இணையப் போகிறார்கள். நடிகர் பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ராதே ஷ்யாம் படம் தோல்வியடைந்துள்ளது.

100 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பை நேரிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் நடித்து வரும் ராமாயணக் கதை மையமாக வைத்து புருஷ் உருவாகிறது. இதில் பிரபாஸ் ராமனாக நடிக்கிறார்.

Prabhas, Deepika Padukone and Amitabh Bachchan's 'Project K' Goes on Floors

தொடர்ந்து மகாநடி படத்தின் இயக்குநருடன் ஒரு படம்,கேஜிஎஃப் இயக்குநருடன் ஒரு படம் என அடுத்தடுத்து படத்தில் நடித்து வரும் பிரபாசுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் ஒரு படத்திலும் சுருதிஹாசன் ஒரு படத்திலும் ஜோடியாகின்றனர்.

Prabhas And Anushka Wallpapers - Wallpaper Cave

இந்த நிலையில் தெலுங்கு இயக்குநர் மாருதி உடன் பிரபாஸ் கூட்டணி அமைத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க போவது யார் என்ற தகவல் கசிந்துள்ளது. பாகுபலியில் மிரட்டிய அனுஷ்கா நாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Pin on Mirchi

இதனால் பிரபாஸ் – அனுஷ்கா ரசிகர்கள் செம ஹேப்பியாக உள்ளனர்.

Views: - 612

3

0