தாய்மொழியை பாராட்டுங்க.. அடுத்தவர் மொழியை பழிக்காதீங்க.. அது அழகல்ல : தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
15 May 2022, 11:06 pm
Tamilisai - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : நமது தாய்மொழியான தமிழை பாராட்டும் போது அடுத்தவர் மொழியை பழிப்பதோ அடுத்தவர் தொழிலை குறைவாக பார்ப்பதோ நமது கலாச்சாரத்திற்கு அழகல்ல என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார்.

மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலாக பாஜகவின் மகளிரணியின் முன்னாள் தேசிய பொதுச்செயலாளர் விக்டோரியா கவுரியின் மகளின் திருமணநிகழ்ச்சி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது இந்த திருமணத்தில் தமிழ் கலாச்சாரபடி தமிழில் மந்திரங்களை ஓதி திருமணம் நடைபெற்றது.

Image

திருமணவிழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் திருமண வீட்டார் பாரதியார் புத்தகங்களை வழங்கினர். இதில் சிறப்பு விருந்தினாரக கலந்து கொண்டு மணமக்களை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்தினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
பவர்ணமி நாளில் கன்னியாகுமரியில் நடந்து வரும் கடல் ஆரத்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதுவும் கங்கா ஆரத்தி போன்றது. இதன் மூலம் இளைஞர்களுக்கு நதி நீரின் முக்கியத்துவம் பற்றி தெரிவதற்கும் நதி நீரை சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் இளைஞர்களிடையே வளரும்.

Image

தமிழகத்தை பொறுத்தவரை இந்தி மொழியை விருப்பப்பட்டால் யார் வேண்டுமானாலும் படிக்கலாம் மக்களுக்கான பெயர் பலகை கூட தமிழில் தான் உள்ளது இதனை நாம் ஒரு உறுதி செய்துள்ளோம்.

நாம் நமது மொழியை பாராட்டும் அதே வேளையில் அடுத்த வரும் மொழியை பறிப்பது அல்லது அவர்களது தொழிலை குறைவாக மதிப்பிடுவது நமது கலாச்சாரத்திற்கு அழகல்ல. இன்னொரு மொழியை படிப்பதால் இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு அது பயனுள்ளதாக அமையும்.

எங்கும் இந்தி மொழியை படிக்க வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்தவில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே ஆன்மீக தமிழ் உள்ளது. ஆன்மிகத்தை விடுத்து தமிழ் கிடையாது. எனவே தமிழின் பெருமையை நாம் உலகத்திற்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 1299

0

0