கொரோனா 3வது அலை வந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தயார் : அமைச்சர் கேஎன் நேரு..

17 May 2021, 4:31 pm
KN Nehru- Updatenews360
Quick Share

மதுரை : கொரோனா 3 ஆம் அலை வந்தால் கூட மக்களை காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார்.

மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் மற்றும் மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், திண்டுக்கல் ஆகிய மாநகராட்சிகளின் ஆணையர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், மாநகராட்சி பகுதிகளில் நோய் தொற்று குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, தொடர்ச்சியாக ஊரடங்கு என்றால் மக்கள் பாதிக்கப்படுவார்கள், மக்கள் பாதிக்காத அளவில் தளர்வுகளுடன் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

மதுரைக்கு தேவையான ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா 3ஆம் அலை வந்தால் கூட மக்களை காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விழிப்புணர்வு வழியாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது.

தேவையில்லாதவர்கள் கூட ரெம்சிடிவர் மருந்தை வாங்கி செல்வதால் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. உயிரை பற்றி கவலைப்படாமல் அதிகாரிகள் பணியாற்றி வருகிறார்கள் என கூறினார்.

Views: - 143

0

0