உதகைக்கு தனி ஹெலிகாப்டரில் வந்த குடியரசுத் தலைவர், ஆளுநர் : நாளை பயிற்சி முடித்த ராணுவ வீரர்களுக்கு பட்டயம் வழங்குகிறார்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 August 2021, 1:50 pm
Ooty President 1- Updatenews360
Quick Share

நீலகிரி : உதகைக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனி ஹெலிகாப்டர் மூலம் மூன்று நாள் சுற்றுப்பயணமாக உதகைக்கு வந்தடைந்தார்.

கோவையில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலமாக உதகையில் உள்ள தீட்டுக்கல் ஹெலிக்காப்டர் தளத்திற்கு வந்தடைந்து வாகனம் மூலம் அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள ராஜ்பவன் மாளிகைக்கு சென்றடைந்தார்.

தமிழக அரசு சார்பில் தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கா. ராமச்சந்திரன் ஆகியோர் பூங்கொத்து அளித்து வரவேற்பு அளித்தனர். எதிர்வரும் 6ஆம் தேதி வரை உதகையில் தங்கி, பைக்காரா படகு இல்லம் உட்பட சில சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல உள்ளார் .

நாளை குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரி செல்லும் குடியரசுத் தலைவர் 527 இந்திய ராணுவ அதிகாரிகள் மற்றும் பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த 50 ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு பயிற்சி முடித்ததற்கான பட்டயங்களை வழங்குகிறார்.

மேலும் குடியரசுத்தலைவர் வருகையையொட்டி உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு காவல் துறை இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி , மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் தலைமையில் நான்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உட்பட 1300 கற்கும் மேற்பட்ட போலீசார் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

Views: - 255

0

0