சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 10 புதிய நீதிபதிகளை நியமனம் செய்ய குடியரசு தலைவர் ஒப்புதல்

1 December 2020, 7:18 pm
Chennai HC-updatenews360
Quick Share

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதலாக 10 நீதிபதிகளை நியமனம் செய்ய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக இருந்த நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்கான பரிந்துரை பட்டியல் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில், கூடுதலாக 10 நீதிபதிகளை நியமனம் செய்ய அவர் ஒப்புதல் அளித்தார்.

அதன்படி, கண்ணம்மாள், சண்முகசுந்தரம், சாந்திகுமார், முரளி சங்கர், மஞ்சுளா ராமராஜு, தமிழ்ச்செல்வி, சந்திரசேகரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன், கணேசன், நக்கீரன் மற்றும் ஆனந்தி சுப்பிரமணியம் ஆகிய 10 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதன்மூலம், சென்னை உயர்நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது. காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 12 ஆக குறைந்துள்ளது.

Views: - 24

0

0