கொடைக்கானலில் தலைசுற்ற வைக்கும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!!

23 January 2021, 1:29 pm
Petrol Rate - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : தமிழகத்தில் அதிக படியாக கொடைக்கானலில் பெட்ரோல் விலை ரூ.90.83 விற்பனை செய்யப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை ஏறி வருகிறது. இந்நிலையில் நாளுக்கு நாள் பெட்ரோல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனால் தொடக்கத்தில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி இருந்தது. ஆனால் ஜூன், ஜூலை மாதங்களில் விலை படிப்படியாக உயரத் தொடங்கியது. தற்போது தமிழகத்தில் அதிக படியாக பெட்ரோல் விலை 90.83 ஆக கொடைக்கானலில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனால் வாகன ஓட்டிகள் பெட்ரோல் விலை உயர்வால் தங்களின் அன்றாட தேவைகளுக்கும் சென்று வர முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். மத்திய அரசு நாளுக்கு நாள் பெட்ரோல் விலை உயர்த்தி வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பெட்ரோல் விலையை குறைக்க வேண்டுமென கோரிக்கையும் எழுந்துள்ளது

Views: - 9

0

0