பாதிரியார் பண்ற வேலையா இது?: ஜெபம் செய்த பெண்ணிடம் சில்மிஷம்…கம்பி எண்ண வைத்த கணவன்..!!

19 April 2021, 5:31 pm
Quick Share

சென்னை: ஜெபம் செய்ய வந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியாரை பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை ஆவடி கனரக தொழிற்சாலை காவல் நிலையத்தில் ஆவடியை அடுத்த அரிக்கமேடு பகுதியைச் சேர்ந்த 42 வயதான தேவராஜ் என்பவர் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், குடும்ப பிரச்சனையை தீர்த்து வைப்பதாக கூறி கிறிஸ்துவ மதபோதகர் அவரது மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அதில் குறிப்பிடப்பட்டிருந்து.

மேலும், அந்த புகாரில் பாதிரியார் பாஸ்ட்டர் ஸ்காட் டேவிட் என்பவரிடம் பெண் ஒருவர் தனது குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை கூறியுள்ளார். இதனை தனக்கு சாதகமாக்கி கொண்ட அந்த பாதிரியார், ஜெபம் செய்தால் குடும்ப பிரச்சனை தீர்ந்துவிடும் என கூறியுள்ளார்.

இதனையடுத்து, கடந்த 17ம் தேதி ஆவடி மோரையில் உள்ள பொதுவாழ்வு ஏசு திருச்சபைக்கு தனியாக வரவைத்து கண்மூடி ஜபம் செய்ய வைத்துள்ளார். அந்த சமயத்தில் அந்த பெண்ணிடம் பாதிரியார் தவறாக நடந்து கொண்டதாகவும், அவரை கைது செய்யக்கோரியும் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து புகாரின் பேரில் போலீசார் பாதிரியாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும், பாதிரியார் பாஸ்ட்டர் ஸ்காட் டேவிட் வேறு ஏதாவது பெண்களை ஜபக்கூட்டத்திற்கு அழைத்து பாலியியல் அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 114

1

0