தமிழக மாணவிக்கு பிரதம மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருது : ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கி பிரதமர் மோடி கவுரவிப்பு

Author: kavin kumar
24 January 2022, 5:42 pm
Quick Share

விருதுநகர் : வெள்ளத்தால் உயிர் மற்றும் உடைமை சேதம் ஏற்படாத வீட்டை வடிவமைத்த விருதுநகர் சிறுமி விசாலினிக்கு ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருது வழங்கப்பட்டது.

விருதுநகர் லட்சுமி நகரை சேர்ந்த மருத்துவர் நரேஷ் குமார்- மருத்துவர் சித்திர கலாவின் மகள் விசாலினி. தற்போது 8 வயதாகும் இவர், தனது 6 வயதில் இந்தியாவில் ஏற்பட்ட வெள்ள சேதங்களை தொலைக் காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த போது மக்களின் உயிரும் உடைமையும் பறிபோவதை எண்ணி கவலையுற்று வெள்ளப் பாதிப்பிலிருந்து மக்களையும் அவர்தம் உடைமைகளையும் பாதுகாக்கும் படியான ஒரு பலூன் வீட்டை உருவாக்கினார். அதற்கு ‘ஒரு தானியங்கி பல செயல்பாட்டு வாழ்க்கை மீட்பு வெள்ளம் வீடு’ என்ற தலைப்பில் ஒரு கண்டுபிடிப்பு காப்புரிமை தாக்கலை, செப்டம்பர் 23, 2020 அன்று இந்திய காப்புரிமை அலுவலகத்தில் செய்தார்.

அதை ஏற்று இந்த கண்டுபிடிப்பு காப்புரிமை மே 10, 2021 அன்று இந்திய அரசால் இவருக்கு வழங்கப்பட்டது. இந்த கண்டுபிடிப்பு காப்புரிமை செப்டம்பர் 23, 2020 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த வகையான வீடுகள் கடல் பகுதிக்கு அருகில் வசிக்கும் மீனவருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரியவருகிறது. இவரின் இந்த சாதனை இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் 2022 இன் கீழ் ‘இளைய காப்புரிமை வைத்திருப்பவர்’ என்ற தலைப்பில் இந்த மைல்கல்லை அங்கீகரித்து, இணங்கி, இறுதி செய்தது. மேலும் இந்திய பதிவேடுகள் புத்தகம்,

இந்தியாவில் தனது 6 வயதில் காப்புரிமை பெற்ற ஒரே ஒருவர் விஷாலினி, இந்தியாவில் முதல் மற்றும் உலகின் இரண்டாவது இளம் வயதில் காப்புரிமை வைத்திருப்பவர் என பெயரிட்டு காப்புரிமையும் பெற்றுள்ளார். இவரின் திறமையையும் ஆர்வத்தையும் பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசால் ‘ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருது’ அறிவிக்கப்பட்டது. அந்த விருதை,விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காணொலி காட்சி அரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமையில் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி சிறுமி விசாலினியை வாழ்த்தி விருது வழங்கினார்.மேலும் ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

Views: - 1793

0

0