சமூக நீதியை போற்றும் பிரதமர் மோடி : மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் புகழாரம்..!

Author: Udayachandran RadhaKrishnan
16 August 2021, 4:44 pm
Murugan- Updatenews360
Quick Share

கோவை : சமூக நீதியை போற்றும் பிரதமாராக இருக்கிறார் நரேந்திரமோடி என்று மத்திய இணை அமைச்சர் முருகன் கோவையில் பேசியுள்ளார்.

பாஜக அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் கோவையில் மக்கள் ஆசிர்வாத யாத்திரியை மத்திய இணை அமைச்சர் முருகன் இன்று துவக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து மக்கள் மத்தியில் அவர் பேசியதாவது: அருந்ததியர் சமூதாயத்தில் பிறந்த என்னை பிரதமர் நரேந்திரமோடி இணை அமைச்சராக பதவியேற்று அழகு பார்த்துள்ளார்.

செருப்பு தைக்கும் தொழிலாளி குடும்பத்தை சேர்ந்த என்னை மாநில தலைவராக்கியது பா.ஜ.க., தமிழகத்தில் எந்த கட்சியும் இதனை செய்ததில்லை. நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கும் இந்த சமுதாயம்.

அனைவருக்கும் வீடுகட்டும் திட்டத்தையும், ஒவ்வொரு வீட்டிற்கும் கழிப்பறை கட்டும் திட்டத்தையும் நிறைவேற்றியுள்ளது மத்திய அரசு. 8 கோடி பேருக்கு இலவச கேஸ் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது

2014ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு விவசாயி கூட தற்கொலை செய்யவில்லை. வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் விவசாயிகளின் வங்கிக்கணக்கிற்கு செலுத்தப்படுகிறது. ஆயுஷ்மான் பாரதம் மூலம் 5 லட்சம் மதிப்பிலான இலவச காப்பீடு திட்டம் கொடுத்துள்ளனர்.

சமூக நீதியை போற்றுகிறவராக பிரதமர் இருக்கிறார். இந்த மத்திய அமைச்சரவையில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 12 அமைச்சர்கள், பழங்குடியினத்தைச் சேர்ந்த 8 அமைச்சர்கள், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த 28 அமைச்சர்கள் உள்ளனர்.

நலத்திட்டங்களை செய்துள்ளதால் மக்களிடம் ஆசியை பெறுவதற்காக இந்த யாத்திரை நடத்தப்படுகிறது. இவ்வாறு கூறினார்.

Views: - 176

0

0