பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க 26ஆம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடி : தமிழக பாஜகவுடன் முக்கிய ஆலோசனை என தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 May 2022, 6:02 pm
Chennai Modi - Updatenews360
Quick Share

மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டக்ளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னை வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.

சென்னை நேரு உள் விளையாட்டரகில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டக்ளை தொடங்கி வைக்க வரும் 26ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.

மேலும் மத்திய நெடுஞ்சாலைத்துறையின் பணிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதே போல மதுரை – தேனி இடையிலான அகல ரயில் பாதை திட்டத்தையும் பிரதமர் திறந்து வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. அதே போல தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு, இந்தி திணிப்பு மற்றும் பல்வேறு தமிழக அரசியல் குறித்து தமிழக பாஜக முக்கிய பிரமுகர்கள் மோடியை சந்தித்து பேச உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Views: - 405

0

0