பிரதமர் மோடி பிறந்தநாள் : 71 தூய்மை பணியாளர்களுக்கு பாத பூஜை செய்த பா.ஜ.க.வினர்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 September 2021, 2:12 pm
BJP Modi Bday -Updatenews360
Quick Share

கோவை : பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் 71 தூய்மை பணியாளர்களுக்கு பாஜக.,வினர் பாத பூஜை செய்தனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பிரதமரின் பிறந்த நாளை “சேவா திவஸ்” என்ற பெயரில் பா.ஜ.க.,வினர் கொண்டாடி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக கோவை கே.என்.ஜி புதூர் பகுதியில் பாஜக கோவை மாநகர மாவட்ட பட்டியல் அணி, சார்பாக நிகழ்ச்சியில் கட்சியின் கொடியினை ஏற்றி வைத்து, தற்போது முன்களப்பணியாளர்களாக விளங்கும் தூய்மை பணியாளர்கள் 71 பேருக்கு பாத பூஜை செய்தனர்.

தொடர்ந்து மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பா.ஜ.க.,வினர் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Views: - 204

0

0