‘பரோல் கிடைக்கும் வரை சாப்பிட மாட்டேன்’: கோவையில் ஆயுள் தண்டனை கைதி உண்ணாவிரதம்..!!

19 July 2021, 12:41 pm
Quick Share

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் பரோலில் விடுவிக்க கோரி ஆயுள் தண்டனை கைதி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பொள்ளாச்சியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. ஆசிரியரான இவர் கடந்த 1997ஆம் ஆண்டு உக்கடம் பஸ் நிலையத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கோவை கோட்டைமேட்டை சேர்ந்த அபுதாகிர் உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர்.

இதில், அபுதாகீர் கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியாக அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சமீபகாலமாக அவர் தனக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி பரோல் கேட்டு சிறை அதிகாரியிடம் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் அவருக்கு பரோல் கிடைக்கவில்லை.

இந்நிலையில், அவருக்கு கையில் ஏற்பட்ட கட்டி காரணமாக நேற்று கோவை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பலத்த பாதுகாப்புடன் கைதிகளுக்கான தனி வார்டில் அடைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு நேற்று இரவு ஊழியர்கள் உணவு எடுத்து சென்றனர். ஆனால் அவர் அதை உண்ண மறுத்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

பரோல் கிடைக்கும் வரை சாப்பிட மாட்டேன் என தொடர்ந்து அவர் இன்றும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ஆயுள் தண்டனை கைதி உண்ணாவிரதம் இருப்பது மருத்துமனை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 113

0

0