இனி தமிழகத்தில் தனியார் பேருந்துகள் இயக்கலாம்: போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி

7 September 2020, 8:32 pm
Quick Share

கரூர்: தமிழகத்தில் தனியார் பேருந்துகள் அரசு வழிகாட்டு முறைப்படி இயங்கலாம் என கரூரில் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

இன்று முதல் தமிழகத்தில் மாவட்டங்கள் இடையே பொதுப் போக்குவரத்து தொடங்க அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில், கரூர் மாவட்டத்தில் இன்று 163 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கரூர் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தனியார் பேருந்துகள் அரசு விதிமுறைப்படி இயக்கலாம் ஊரடங்கு காலத்தில் தனியார் பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்த நிலையில்,

இரண்டு காலாண்டு வரி செலுத்த வேண்டும் என்ற அரசு அறிவிப்பு குறித்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதாகவும், தமிழகத்தில் தனியார் பேருந்துகள் அரசு வழிகாட்டு முறைப்படி இயங்கலாம் என தெரிவித்த அமைச்சர், அரசு பேருந்துகள் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருவதாகவும், கரூர் மண்டலத்தில் 60 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும், பயணிகள் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், முகக் கவசம் அணியாமல் வரும் பயணிகள் நடத்துனரிடம் 5 ரூபாய் கட்டணம் செலுத்தி முககவசம் பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

Views: - 7

0

0