வாடிக்கையாளர்களின் கையெழுத்தை போட்டு லட்சக்கணக்கில் மோசடி.. தனியார் நிதி நிறுவன தலைமை நிர்வாகிகள் கைது..!!

Author: Babu Lakshmanan
9 August 2022, 7:27 pm
Quick Share

வாடிக்கையாளர்களின் கையெழுத்தை போலியாக போட்டு லட்சக்கணக்கில் தனியார் நிதி நிறுவன தலைமை நிர்வாகிகள் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

வங்கி , நிதி நிறுவனங்களை நடத்துபவர்களுக்கு தலைவலியாக இருப்பவர்கள் முக மூடி கொள்ளையர்கள். முகமுடி கொள்ளையர்களெக்கே சவால் விடும் அளவுக்கு டெக்னிக்கல் கோட் சூட் கொள்ளையர்கள் அட்டகாசம் தலைவிரித்து ஆடுகின்றன. இந்த நிலையில் நடப்பில் நிகழும் குற்றங்களை பார்த்தால் யாரை நம்பி உடமைகளை ஒப்படைப்பது என்று தெரியாமல் முதலாளிகள் விழி பிதுங்குகின்றனர்.

அப்படிப்பட்ட நூதன திருட்டு கோயமுத்தூரில் நடந்தேறியிரிக்கின்றன. கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஐசிஎல் ஃபின்கார்ப் எனும் தனியார் நிதி நிறுவனம். நகைகளை அடகு வைத்து வட்டிக்கு பணம் தந்து வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை குனியமுத்தூர் கிளையில் தலைவராக கார்திகாம், மேனேஜராக சரவணகுமாரும், நிதி நிறுவன கிளையின் துணை தலைவராக சத்யா என்பவரும் பணியாற்றியிருக்கின்றனர். வருடாந்திர தணிக்கை நிதி நிறுவன கிளையில் முன்னர் நடந்திருக்கின்றன. அப்போது தங்க நகைகள் சரிபார்த்து கணக்குகளை சரிபார்த்திருக்கின்றனர்.

அப்போது, லாக்கரில் போலி நகைகள் வைத்திருந்ததை தணிக்கை குழு நகை மதிப்பீட்டு குழு அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. இதையடுத்து, உடனடியாக நிறுவனத்தில் பணியாற்றியவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதில் குனியமுத்தூர் கிளையில் தலைவராக கார்திகா, மேனேஜராக சரவணகுமார் , நிதி நிறுவன கிளையின் துணை தலைவராக சத்யா கூட்டு சதி செய்தது விசாரணையில் அம்பலமானது. அதாவது, இந்த மூவரும் கிளையில் வரவு செலவு வைத்திருக்கின்ற வாடிக்கையாளர்கள், உறவினர்கள் வாடிக்கையாளர்களாக இருப்பவர்கள் என 10க்கும் மேற்ப்பட்டோரின் ஆவணங்களை பயன்படுத்தி போலி கையொப்பமிட்டு பலே மோசடியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

அதாவது, 597 கிராம் போலி நகைகளை 25 பொட்டலங்களை வைத்து வாடிக்கையாளர்களுக்கு கடன் தந்தது போல கணக்கு காட்டி 26 லட்சம் ரூபாயை நூதன கொள்ளையடித்திருக்கின்றனர். நிதி நிறுவனத்தில் பணத்தை கொள்ளையடித்தது மட்டுமின்றி அடகு வைக்க வந்த 11 நகை பொட்டலங்களில் இருந்த 227 கிராம் ஒரிஜனல் 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை எடுத்து, அதற்கு பதிலாக போலி நகைகளை பாக்கெட்டில் அடைத்து லாக்கரின் அடகு நகையாக கணக்குகாட்டியிருக்கின்றனர்.

இதுகுறித்தி நிதி நிறுவனம் சிட்டி கிரைம் பிரான்சில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் சத்யாவை கைது செய்த நிலையில், போலிஸார் நகைகளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தலைமறைவான கார்திகா, சரவணகுமாரை போலீஸார் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நூதன முறையில் திருடிய பணம் நகைகளை பங்கிட்டு வீடு கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தியிருக்கலாமென தகவல்கள் தெரிவிக்கின்றன. நிதி நிறுவனத்தில் முகமுடிகளை அணிந்து கொள்ளையடிப்பவர்களை விட கோட் சூட் அணிந்து கொள்ளையடிக்கும் டெக்னிக்கல் கொள்ளையர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Views: - 463

0

0