வீட்டில் அத்துமீறி நுழைந்து கட்டிலில் படுத்துக்கொண்டு கடன் வசூல் : தனியார் நிதி நிறுவன ஊழியர் கைது!!
19 November 2020, 11:37 amதிண்டுக்கல் : வடமதுரை அருகே கடன் தொகையை வசூலிக்க சென்று பணம் இல்லை என்று கூறியும் கட்டிலில் படுத்து அத்துமீறலில் ஈடுபட்ட தனியார் நிதி நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா காக்காயன்குளத்துப் பட்டியைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் தனியார் நிதி நிறுவனத்தில் 60 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு கொரோனா நேரத்தில் கட்ட முடியாமல் நிலையில் இருந்தது.
இந்த நிலையில் வீட்டுக்குள் அத்துமீறி சென்று கட்டிலில் படுத்துக்கொண்டு பணம் கொடுத்தால் தான் செல்வேன் என்று அராஜகம் செய்த தனியார் நிதி நிறுவன ஊழியரின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலானது.
தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனியார் நிதி நிறுவன ஊழியர் சேர்வகாரன்பட்டியை சேர்ந்த மணிமுத்து என்பவரை வடமதுரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தமிழக முதலமைச்சர் கொரோனா காலத்தில் பணம் வசூல் செய்ய வேண்டாம் என்று கூறியும் அத்துமீறி பணம் வசூல் செய்யும் தனியார் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்