அரசு துவக்கப்பள்ளியை தத்தெடுத்த தனியார் அறக்கட்டளை: ரூ.3 கோடி செலவில் பள்ளியை மேம்படுத்தும் பணிகள் துவக்கம்..!!

Author: Rajesh
25 February 2022, 3:18 pm
Quick Share

கோவை: கோவையில் மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து மாணவ,மாணவிகள் பயிலும் அரசு துவக்கப்பள்ளியை தத்தெடுத்த தனியார் அறக்கட்டளை ரூபாய் 3 கோடி செலவில் பள்ளியை மேம்படுத்தும் பணிகளை துவக்கியது.

கோவையை சேர்ந்த மார்ட்டின் குரூப் ஆப் நிறுவனத்தினர் தங்களது அறக்கட்டளை வாயிலாக மருத்துவம், கல்வி மற்றும் பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்குவது உள்ளிட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அரசு ஒன்றிய துவக்க பள்ளியை தத்தெடுத்த மார்ட்டின் அறக்கட்டளையினர் பள்ளிக்கு தேவையான கழிப்பறை வசதிகள், நவீன கணிணி லேப் மற்றும் அறிவியல் லேப் என ரூபாய் மூன்று கோடி செலவில் பள்ளிக்கு தேவையான கட்டமைப்பு பணிகளை துவக்கினர்.

இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில், அறக்கட்டளை நிர்வாகிகள் லீமா ரோஸ் மார்ட்டின், ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் மற்றும் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Views: - 333

0

0