ஆபரேசனில் அலட்சியம்… கோமாவுக்கு சென்ற இளம்பெண்… மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்…!!
நாமக்கல் மாவட்டம் வேல கவுண்டம்பட்டி குண்ணாங்கல் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (47). வெல்டிங் கூலி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி அமுதா. இவர்களுக்கு அக்க்ஷிதா என்ற 18 வயது மகளும், சங்கீத் என்ற மகனும் உள்ளனர்.
திருச்செங்கோட்டில் உள்ள செங்குந்தர் கலை அறிவியல் கல்லூரியில் EEE இரண்டாம் ஆண்டு படித்து வரும் அக்க்ஷிதா, நேற்று முன்தினம் சனிக்கிழமை கல்லூரியில் வயிற்று வலிப்பதாக கூறிய நிலையில், திருச்செங்கோடு விவேகானந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்து அனுமதித்தனர்.
பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஒட்டுக்குடல் முற்றிய நிலையில் வெடிக்கும் நிலையில் இருப்பதாகவும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.
இதற்கு சம்மதித்த பெற்றோர் அறுவை சிகிச்சை செய்ய அக்ஷிதாவை அழைத்துச் சென்றவர்கள், திருப்பிக் கொண்டு வரும்போது அறுவை சிகிச்சையின் போது ஆக்சிஜன் அளவு கூடிவிட்டதாகவும் இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் மயக்க நிலைக்கு சென்று கோமா நிலையில் இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் கூறியுள்ளனர்.
இதனால், பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவி அக்ஷிதாவை பார்க்க வேண்டும் என மருத்துவமனை முன் திரண்ட நிலையில், பார்க்க அனுமதிக்காத மருத்துவமனை நிர்வாகம், அவர்களிடம் அலட்சியமாக பதில் கூறி நாங்களா உங்களை இங்கே சிகிச்சைக்காக அழைத்தோம்? என கேட்டதால் பெற்றோர் ஆத்திரமடைந்தனர்.
படுத்த படுக்கையாக உள்ள சுயநினைவு இல்லாமல் இருப்பதாக கூறப்படும் மாணவி அக்ஷிதாவை உடனடியாக தங்களுக்கு காண்பிக்க வேண்டும் என அவசர சிகிச்சை பிரிவின் முன் நின்று சத்தம் போட ஆரம்பித்தனர் கூச்சல் போட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தையை அடுத்து, மாணவி உயிருடன் இருப்பதும் தற்போது கை கால்கள் அசைவு இருப்பதாகவும், உடனடியாக உயர் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும், அந்த உயர் சிகிச்சைகளுக்கானசெலவை விவேகானந்தா தனியார் மருத்துவமனை ஏற்பதாக உறுதியளிக்கப்பட்டதை அடுத்து, மாணவி உயர் சிகிச்சைக்காக கோவை கொண்டு செல்லப்பட்டார்.
வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…
பிரபல இயக்குநர் சொன்ன கதைப்படி படம் முழுவதும் பாவாடை கட்டிக்கிட்டு வரவேண்டும் என்பதால் படத்தில் இருந்து விலகியுள்ளார் சூப்பர் ஸ்டார்.…
தேர்தலை நோக்கி விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நோக்கி விஜய் நடைபோட்டுக்கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் இரண்டு…
விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி பெரிய திரையில் வாய்ப்பு பெற்றவர் நடிகர் யோகி பாபு. டைமிங் காமெடி மூலம்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாஜக வடக்கு மண்டல் தலைவராக பாலகிருஷ்ணன் என்பவரது பதவி ஏற்பு விழா உசிலம்பட்டியில் உள்ள தனியார்…
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
This website uses cookies.