மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்; தனியார் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை சிறையிலடைக்க உத்தரவு

Author: Udhayakumar Raman
14 November 2021, 11:36 pm
teacher arrest 1- updatenews360
Quick Share

கோவை: கோவையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள தனியார் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து, அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவையில் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் அந்த மாணவி முன்னாள் படித்த தனியார் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் மாணவி புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் அப் பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனும் கைது செய்யப்பட்ட அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து இன்று ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து அவர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இதில் தொடர்புடைய பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் தலைமறைவனர். இதனையடுத்து பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீது போலீசார் போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்ததுடன் அவரைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்தனர். தனிப்படை போலீசார் தலைமறைவாக இருந்த பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை தேடி வந்த நிலையில் அவர் பெங்களூரில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் பெங்களூரு விரைந்த தனிப்படை போலீசார் அங்கு தலைமறைவாக இருந்த பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனை நேற்று நள்ளிரவில் கைது செய்து கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.முதல்வர் மீரா ஜாக்சனை 26ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து, அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Views: - 223

0

0