பெற்றோர்களை மிரட்டும் தனியார் பள்ளி உரிமையாளர்கள் : நடவடிக்கை என்ன..?

3 September 2020, 10:26 am
Quick Share

முதல் தவணையை செலுத்த பெற்றோரை தனியார் பள்ளி உரிமையாளர்கள் மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

நாடு முழுவதும் காட்டு தீபோல் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

வேலையிண்மை போன்ற பல்வேறு காரணங்களால் அவர்களின் வாழ்வாதாரமும் கேள்வி குறியாகி உள்ளது. இதேபோல், கொரோனா அச்சத்தால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது, இதனால் மாணவர்களும் பல்வேறு சிறமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

வீட்டில் இருந்த படியே ஆன்லைன் வகுப்பில் பாடம் கற்கும் மாணவர்கள் சிலர், பாடம் எடுப்பது விளங்காமல் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த சூழலில், சில தனியார் பள்ளி நிர்வாகங்கள் பெற்றோர்களிடையே அதிகளவு கட்டணம் வசூலிப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளது.

தனியார்ப் பள்ளி நிர்வாகத்தினர் பெற்றோர்களிடம் முதல் தவணை கட்டணம் மற்றும் புத்தகத்திற்கான கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்துவதாகவும், கட்டணம் செலுத்தாத மாணவர்கள் ஏற்கனவே படித்த வகுப்பிலேயேதான் தொடருவார்கள் என்று மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது.

அதே சமயத்தில் பள்ளி நிர்வாகங்களுக்கு அரசு நெருக்கடி கொடுப்பதாக மெட்ரிகுலேஷன் பள்ளி உரிமையாளர்களும் தெரிவித்துள்ளனர். இதனிடையே உயர் நீதிமன்ற உத்தரவை மீறி முதல் தவணையாக 40 சதவிகிதத்துக்கு மேல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் 40 சதவிகிதத்துக்கும் மேல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் குறித்துப் பெற்றோர் புகார் அளிக்கும் வகையில் பிரத்யேக இ-மெயில் முகவரியை உருவாக்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Views: - 0

0

0