புதிய திரைப்படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் முன்வரவேண்டும் : நடிகர் சரவணன் வேண்டுகோள்!!

8 November 2020, 3:55 pm
Actor saravanan - Updatenews360
Quick Share

சேலம் : திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் புதிய திரைப்படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் முன்வரவேண்டும் என திரைப்பட நடிகர் சேலம் சரவணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

சேலத்தில் தென்னிந்திய நாடக நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசாக வேட்டி, சேலைகள் மற்றும் இனிப்புகளை திரைப்பட நடிகர் சரவணன் வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் அம்மாவை காட்டிலும் சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தந்து கொண்டிருப்பதால் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என தெரிவித்தார்.

மேலும் உடல் நிலையை கருத்தில் கொண்டு நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரத் தேவையில்லை எனவும், வெளியில் இருந்து அவர் கருத்து கூறினாலே போதுமானது எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஏழு மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருவதால் பிரபல திரையுலக நட்சத்திரங்களை தவிர மற்ற அனைத்து நடிகர்களும் போதிய வருமானம் இன்றி தவித்து வருவதாகவும், திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் எடுத்து முடிக்கப்பட்ட புதிய திரைப்படங்களை தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே திரையிட தயாரிப்பாளர்கள், வெளியீட்டாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Views: - 26

0

0