சட்டவிரோத கருந்திரியை பயன்படுத்தி பட்டாசு தயாரிப்பு : தீ விபத்து ஏற்பட்டதால் பெண் உயிருக்கு போராட்டம்!!

Author: Udayachandran
3 October 2020, 12:51 pm
Viruthunagar Fire - updatenews360
Quick Share

விருதுநகர் : தடை செய்யப்பட்ட கருந்திரியை வீட்டில் வைத்து பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டபோது தீ விபத்து ஏற்பட்டு பெண் படுகாயம் அடைந்தார்.

விருதுநகர் அருகே சூலக்கரை சத்திய சாய் நகரை சேர்ந்தவர் பால்பாண்டி. இவர் சென்னையில் சினிமா துறையில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சித்ராதேவி (வயது 33) தனது மகள் பார்கவி (வயது 11) உடன் வசித்து வருகிறார்.

வீட்டில் இருந்த சித்ராதேவி சட்டவிரோதமாக பட்டாசு தொழிலுக்கு தேவையான திரியை வீட்டில் வைத்து தயாரித்து வந்ததாகவும் அப்போது எதிர்பாராதவிதமாக வெடிவிபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் சித்ராதேவி பலத்த தீக்காயம் அடைந்தனர். அ

அருகில் இருந்தவர்கள் சித்ராதேவியை மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 80 சதவீதம் தீக்காயமடைந்த சித்ராதேவி விருதுநகர் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் .

தீ விபத்து குறித்து சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எளிதில் தீப்பற்றக்கூடிய இந்த கருந்திரியை வீட்டில் வைத்திருக்கவோ பயன்படுத்தவோ தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சட்ட விரோதமாக வீட்டில் பயன்படுத்தி பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட பெண் படுகாயம் அடைந்துள்ளது அப்பகுதியில் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 52

0

0