பெண்ணுக்கு செயற்கை கால் பொருத்தம்! கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை!!

18 August 2020, 4:11 pm
Cbe Artitical Leg - Updatenews360
Quick Share

கோவை : கோவை அரசு மருத்துவமனையில் கால் இழந்த பெண்ணுக் செய்கை கால் பொருத்தி அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு நீலகிரி, கரூர், கேரளாவில் இருந்தும் தினமும் நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர்.தற்போது அதிக அளவில் வாகன விபத்தினால் பலர் கால்களை இழக்கும் நிலை ஏற்படுகிறது.

விபத்தில் சிக்கும் நபர்களை செயற்கைக்கால் பொருத்த சென்னை செல்ல வேண்டிய நிலை இருந்தது இதற்கு தீர்வு காணும் வகையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வளாகத்தில் 50 லட்சம் மதிப்பில் செயற்கை கால் தயாரிக்கும் நிலையம் துவங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனையின் முட நீக்கியல் மற்றும் விபத்து சிகிச்சை துறையின் தலைவர் வெற்றிவேல் செழியன் கூறியதாவது : செயற்கை அங்கம் தயாரிக்கும் துறை ஏற்படுத்தப்பட்டு தற்போது சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. ஒருவருக்கு செயற்கை கால் ஒன்று தயாரித்து பொருத்தப்பட்டுள்ளது. மேலும் செயற்கை கால் தேவைப்படுவோர் எலும்பு முறிவு சிகிச்சை பிரிவில் 13வது வார்டு சென்று தங்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம, பதிவு செய்ய வருவோர் தங்களின் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, மற்றும் காப்பீடு அட்டை கொண்டு வர வேண்டும்.

இந்த செயற்கை அங்கம் பொருத்தும் சிகிச்சையானது முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பெறலாம். இதற்கென 10 படுக்கைகளுடன் வார்டு ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் எடை குறைவாக தயாரிக்கப்படுவதால் எளிதில் நடந்து செல்ல முடியும் இது தவிர செயற்கை பொருத்தப்பட்டவர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் அளிக்கவும் வல்லுனர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 66

0

0