வெப்சைட் மூலம் விபச்சாரம்… வாடகைக்கு வீடு எடுத்து தம்பதி செய்த வியாபாரம் : 3 அழகிகளுடன் ஸ்பா ஊழியர்கள் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
25 May 2022, 11:01 pm
Website Red Light -Updatenews360
Quick Share

புதுச்சேரி : வெப்சைட் மூலம் விபச்சாரம் செய்து வந்த ஸ்பா ஊழியர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்து 3 அழகிகள் மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.

புதுச்சேரி லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் மசாஜ் சென்டர் (ஸ்பா) ஒன்றில் விபச்சாரம் நடைபெறுவதாக தன்வந்திரி நகர் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

பின்னர் மசாஜ் சென்டருக்குள் அதிரடியாக நூழைந்த போலிசார் அங்கு விபச்சாரம் நடைபெற்றதற்கான ஆணுறைகள் உள்ளிட்ட பொருட்கள் போலீசார் கையில் சிக்கியதை அடுத்து மசாஜ் சென்டரின் ஊழியர்களான திருப்பத்தூரை சேர்ந்த மகி (வயது 32) கள்ளக்குறிச்சியை சேர்ந்த தூயா (எ) தூய நெஞ்சன் (வயது 21), ஆகியோரை கைது செய்து, அங்கிருந்த 3 அழகிகளை போலீசார் மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்,

இதனை அடுத்து கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பெங்களுருவை சேர்ந்த பபிதா புதுச்சேரி வைத்திகுப்பத்தை சேர்ந்த தனது கணவர் சிவராஜியுடன் இணைந்து ஸ்பா மசாஜ் செண்டர் வைத்து விபச்சாரம் செய்து வந்துள்ளதாகவும், இவர்கள் கள்ளக்குறிச்சி, பெங்களுரு என பல்வேறு பகுதிகளை சேர்ந்த அழகிகளை அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வருவதும் இதற்காக அவர்கள் லொகேண்டோ என்கிற வெப்சைட்டில் தங்களை பதிவு செய்து உள்ளதாகவும் இந்த வெப்சைட்டில் பல்வேறு மாநிலத்தின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்,.

இந்த வெப்சைட்டிற்குள் நுழையும் வாடிக்கையாளர்கள் புதுச்சேரி என்று க்ளிக் செய்யும்போது, அவர்களுக்கு ஒரு செல்போன் எண் காண்பிக்கும், அந்த செல்போன் எண்ணில் வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ளும்போது சம்மந்தப்பட்ட வாடிக்கையாளரின் செல்போனுக்கு லோக்கேஷன் ஷேர் செய்யப்பட்டு அவர்களை குறிப்பிட்ட இடத்திற்கு வந்தவுடன் மகி, தூயநெஞ்சன், ஆகியோர் தங்களது வாகனங்களில் சென்று அழைத்து வருவார்கள் என்று தெரியவந்துள்ளது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வடக்கு கண்காணிப்பாளர் பக்தவச்சலம் தலைமறைவாக உள்ள சிவராஜ்-பபிதா தமபதியினர் மற்றும் அவர்களுக்கு மசாஜ் செண்டர் நடத்த வீடு வாடகைக்கு கொடுத்த அதன் உரிமையாளர் சாரம் பகுதியை சேர்ந்த கணேசன் ஆகியோரை தேடி வருவதாகவும், தம்பதியினர் மீது ஏற்கனவே பெரியகடை மற்றும் லாஸ்பேட்டை காவல் நிலையங்களில் விபாசார வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்த அவர் தொடர் விபச்சாரத்தில் ஈடுப்படுவர்கள் மீது குண்டர் தடுப்புச்சட்டம் பாயும் என்றும், அதிக அட்வான்ஸ், வாடகை கிடைக்கிறது என்று சட்டத்திற்கு எதிரான செயல்களுக்கு வீடு மற்றும் இடங்கள் வாடகை விடும் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த அவர், வடக்கு காவல் சரகத்திற்க்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வரும் ஸ்பா மற்றும் மசாஜ் செண்டர்களை போலிசார் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்தார்..

Views: - 840

0

0