கோவில்களை உடனடியாக திறக்க வலியுறுத்தல்: இந்து முன்னணி சார்பில் 150 கோவில்களில் விநோத போராட்டம்..!!

Author: Aarthi Sivakumar
25 June 2021, 5:14 pm
Quick Share

கோவை: தமிழக அரசு கோவில்களை உடனடியாக திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்துமுன்னணி சார்பாக கோவில்களில் சூடம் கொளுத்தி வேண்டுதல் நடத்தும் விநோத போராட்டம் நடைபெற்றது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுபடுத்த முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவில்கள் மற்றும் அனைத்து வழிபாட்டு தளங்கலிலும் வழிபாடு செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவையில் இந்து முன்னனி சார்பாக பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று கோவில்களை திறக்க வலியுறுத்தி சூடம் ஏற்றி வழிபாடு செய்து விநோத போராட்டம் நடைபெற்றது. அதையொட்டி கோவை காந்திபுரத்தில் அமைந்துள்ள சித்தி விநாயகர் கோவிலில் நடைபெற்ற போராட்டத்தில் இந்து முன்னனி கோவை மாவட்ட தலைவர் K.தசரதன் தலைமை வகித்தார்.

கோட்ட செயலாளர் சதீஷ் கோட்ட பேச்சாளர் ஆ.கிருஷ்ணன்.மாவட்ட பொது செயலாளர் M.ஜெய்சங்கர்.மாவட்ட செய்தி தொடர்பாளர் C.தனபால் மாவட்ட செயலாளர் K.மகேஷ்வரன்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் S.ஜெயபால் ஆகியோர் உடனிருந்தனர். இதில் தமிழக அரசே உடனடியாக கோவில்களை திற என கோசமிட்டவாறே சூடம் ஏற்றி வழிபட்டனர்.

இதே போல , கோனியம்மன் கோவில், தண்டுமாரியம்மன் கோவில், சித்தாபுதூர் ஐயப்பன் கோவில், ராம் நகர் ராமர் கோவில் என கோவையின் பல்வேறு இடங்களில் உள்ள சுமார் 150 கோவில்களில் போராட்டம் நடைபெற்றது.

Views: - 254

0

0