மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு : கொட்டும் மழையில் 800க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 October 2021, 6:19 pm
Rain Protest -Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : நாகர்கோவில் மாநகராட்சியுடன் அதனை சுற்றியுள்ள ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஊராட்சி தலைவர்கள், பொதுமக்ள் என 800 க்கும் மேற்பட்டோர் ககொட்டும் மழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நகராட்சியில் கடந்த அதிமுக ஆட்சியில் நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து அதற்கான விரிவாக்க பணிகள் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஊராட்சிகளையும், பேரூராட்சிகளையும் இணைத்து நாகர்கோவில் மாநகராட்சியாக விரிவுபடுத்தும் திட்டம் செயல் முறைக்கு கொண்டுவரப்பட்டது.

அதற்கு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள், 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட வேலையாட்கள் என எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இன்று நாகர்கோவில் மாநகராட்சியிடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ள ஊராட்சி பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 100 நாள் வேலையாட்கள் 800க்கும் மேற்பட்டோர் இன்று நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் எதிரே கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சியிடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும், அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் ஊரக 100 நாள் பணியாளர்கள் என பலர் பாதிக்கப்பட கூடும் என அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Views: - 280

0

0