கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கும் சேவை மையம் : ஆட்சியர் துவக்கி வைத்தார்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 June 2021, 1:33 pm
Cbe Corona - Updatenews360
Quick Share

கோவை : கோவையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கான உளவியல் ஆலோசனைகள் வழங்கும் சேவை மையத்தை மாவட்ட ஆட்சியர் இன்று துவக்கி வைத்தார்.

கொரோனா வைரஸ் தொற்று உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களை சமுதாயம் ஒதுக்கி வைக்கக் கூடாது என்று பல தரப்பினரும் வலியுறுத்தியதோடு, அது தொடர்பான விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தியுள்ளனர்.

இதனால் பாதிப்புக்கு உள்ளானவர்களை ஒதுக்கி வைக்கும் வழக்கம் குறைந்த போயுள்ளது. ஆனாலும், மன ரீதியான பாதிப்புகளை தொற்று பாதிப்புக்கு உள்ளனவர்களும், பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களும் சந்தித்து வருகின்றனர்.

இந்த சூழலில், அவர்களுக்கு உளவியல் ஆலோசனைகளை வழங்க சிறப்பு சேவை மையம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கப்பட்டுள்ளது.

இதனை ஆட்சியர் சமீரன் இன்று துவக்கி வைத்தார். உளவியல் ரீதியான இலவச ஆலோசனைகளை பெற 0422-2201825/2201826/2201828என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Views: - 202

0

0