மாணவிகளை மது குடிக்க வைத்து அத்துமீறல்… தலைமறைவான பி.டி சார்.. அடுத்து நடந்த அதிரடி!!

Author: Udayachandran RadhaKrishnan
11 November 2024, 8:01 pm

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் மாணவிகளை விளையாட்டு போட்டிக்காக தூத்துக்குடி அழைத்து சென்றுள்ளார் பொன்சிங் என்ற பிடி மாஸ்டர்.

அங்கு தங்கியிருந்த அறைக்கு சென்று மாணவிகைளை மது குடிக்க வற்புறுத்தி அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து வெளியில் சொல்லக்ககூடாது என மிரட்டியுள்ளார்.

ஆனால் மாணவிகள் இது குறித்து தங்கள் பெற்றோரிடம் கூறியுள்ளனர். அவர்கள் பள்ளிக்கு வந்து முறையிட்டனர். ஆனால் பள்ளி நிர்வாகம் அதை மூடி மறைத்துள்ளது.

இதையும் படியுங்க: தியாகம்னா என்னனு தெரியுமா? அமைச்சர் செந்தில் பாலாஜி X தளத்தில் கொடுத்த பதிலடி!!

மாணவிகளுக்கு துணையாக பெண் ஆசிரியை ஏன் அனுப்பவில்லை என பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் வாக்குவாதம் செய்தனர்.

பள்ளி நிர்வாகத்தினர் மீது மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் உறவினர்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  • Sathyaraj Daughter Divya Sathyaraj என் வாழ்க்கையில் மிகப்பெரிய சோதனையான காலம் இது.. பிரபல நடிகரின் மகள் வேதனை!
  • Views: - 279

    0

    0