திண்டுக்கல் ; கைதுக்கு பயந்து நெஞ்சுவலி என செந்தில்பாலாஜி நாடகமாடுவதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்திற்கு செயல்பட்டு வரும் தண்டபாணி நிலையத்தில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் அவர் கூறியதாவது:- அரசு போக்குவரத்து துறையில் லஞ்சமாக பணம் பெற்றுக்கொண்டு பணி வழங்காத வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவின்படியே அமைச்சர் செந்தில்பாலாஜி மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள மதுக்கடை பார்களில் போலியான முகவரியை கொண்டு அமைச்சர் செந்தில்பாலாஜி கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு செய்துள்ளார். இது குறித்து பலமுறை எச்சரித்தும் செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக முதலமைச்சர் ஸ்டாலின் பேசுவது தவறு. கைதுக்கு பயந்து நெஞ்சுவலி எனக்கூறி செந்தில்பாலாஜி நாடகமாடுகிறார் என கூறினார்.
முறைகேடாக சம்பாதித்த பலநூறு கோடி ரூபாயை பல்வேறு நாடுகளில் ஹவாலா மூலமாக முதலீடு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கிய உள்ளதாக தகவல் வருகிறது.எனவே அமலாக்கத்துறையினரால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை அரசியல் ஆக்குகின்றனர். கைதை சட்டபூர்வமாக சந்திக்க வேண்டும்.
மேலும் கடந்த 2017ல் நீட் தேர்வு அறிமுகமான போது எதிர்த்து திமுக போராடியது. ஆனால், தற்போது நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் வெற்றி பெற்றதன் மூலம் அதன் நன்மை குறித்து அனைவரும் புரிந்து கொண்டனர். சினிமாவின் மோகம் குறைய துவங்கியதால் மதுவை இலக்காக வைத்து தமிழக மக்களை அடிமையாக்கி வைக்க திமுக முயற்சி செய்கிறது, எனக் குற்றம்சாட்டினார்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.