வெளியவும் போக முடியல.. வீட்டுக்குள்ள இருக்கவும் முடியல.. 6 மணி நேரமாக மின்சார தடையால் பொது மக்கள் அவதி!!

25 April 2021, 2:12 pm
EB Cut -Updatenews360
Quick Share

தூத்துக்குடி : கோவில்பட்டி நகரில் காலை 6மணி முதல் மின்சாரம் தடைப்பட்டுள்ளதால் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன் படி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் முழு ஊரடங்கு காரணமாக சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

அதை மீறி வாகனங்களில் சென்றவர்களுக்கு காவல் துறையினர் அபாரதம் விதித்து வருகின்றனர். 99 சதவீத மக்கள் வீட்டில் முடங்கியுள்ள நிலையில் கோவில்பட்டி நகரின் பல்வேறு பகுதிகளில் காலை 6மணி முதல் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

6 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் தடைபட்டுள்ளதால் பொது மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். குறிப்பாக பேன், ஏர்கூலர், ஏசி போட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் புழுக்கம் தாங்க முடியமால் பொது மக்கள் வீட்டு வாசலில் காற்றுக்காக அமர்ந்து இருக்க வேண்டி சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் காலை 6மணி முதல் இல்லாத காரணத்தினால் சமையல் செய்வதிலும் பெண்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. முழு ஊரடங்கு என்று சொல்லியதால் வெளியேயும் செல்ல முடியமால், மின்சாரம் இல்லாத காரணத்தினால் வீட்டிற்குள்ளும் இருக்க முடியமால் வீட்டின் வாசலில் காத்து கடக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பொது மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

முழு ஊரடங்கினை வரவேற்கிறோம் ஆனால் மின்சாரத் தடையில்லமால் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் தெரிவித்துள்னனர். 6மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் இல்லை என்பதால் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் பெரிதும் சிரமப்பட்டுள்ளனர்.

இது குறித்து மின்சார வாரிய அலுவலகத்தினை தொடர்பு கொண்டு கேட்ட போது துணை மின்நிலையத்தில் பழுது ஏற்பட்டுள்ளதாகவும், பழுது நீக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், ஒவ்வொரு பகுதியாக மின்சாரம் கொடுக்கும் பணியை செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

Views: - 410

0

0