பட்டா தொடர்பாக மனு அளிக்க பொதுமக்கள்: சாலையில் அமர்த்தி வேடிக்கை பார்த்த மாவட்ட நிர்வாகம்..!

16 July 2021, 3:33 pm
Quick Share

கோவை: பட்டா வழங்குவதில் முறைகேடு இருப்பதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தவர்களை நீண்ட நேரம் காக்க வைத்து சாலை அமர்த்தி மாவட்ட நிர்வாகம் வேடிக்கை பார்த்துள்ள சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் காரமடை அடுத்த சிக்காரம்பாளையம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 100 பேர் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர். அந்த மனுவில், சில தனி நபர்கள் பட்டா வாங்கி தருவதாக கூறி எங்களிடம் விண்ணப்பம் செய்ய கூறினர். அதன்பேரில் விண்ணபித்ததில் எங்களுக்கு பட்டா ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த தனி நபர்கள் தலைக்கு ரூ.25 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே பட்டா வழங்கப்படும் என்று கூறியுள்ளனர்.

இது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். இன்று காலையே மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிடுவதற்காக வந்து இருந்தனர். ஆனால் அமைச்சர் கயல்விழி தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக மனு அளிக்க வந்திருந்த 100க்கும் மேற்பட்ட மக்களை வெயிலிலும், மழையிலும் காக்க வைத்துள்ளது மாவட்ட நிர்வாகம். சுமார் 4 மணி நேரமாக சாலையில் நின்றிருந்த மக்கள், சோர்ந்து போய் சாலையில் ஆங்காங்கே அமர்ந்துள்ளனர். மனு அளிக்க வருபவர்களுக்கு குறைந்த பட்ச மரியாதை கூட வழங்காமல் மாவட்ட நிர்வாகம் நடந்து கொள்வது கண்டனத்திற்கு உரியது என்றனர் மனு அளிக்க வந்த மக்கள்.

Views: - 134

0

0