ராணிப்பேட்டையில் மாலை 5 மணி வரை பொதுப்போக்குவரத்து நிறுத்தம் : ஆட்சியர் அறிவிப்பு!!

26 November 2020, 8:16 am
Ranipet - Updatenews360
Quick Share

ராணிப்பேட்டை : நிவர் புயல் எதிரொலியாக இன்று மாலை 5 மணி முதல் பேருந்துகள் இயங்காது என ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளார்.

தாழ்வான பகுதி மற்றும் குடிசை பகுதிகள் உள்ளிட்ட பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார் .

4640 பேர் மீட்க்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு தேவையான அனைத்து விதமான உணவு, உடை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் ஒவ்வொரு முகாமிலும் ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டு இருப்பவர்களுக்கு தேவையான அனைத்து வசதியும் செய்து தரப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

புயல் கரையை கடக்கும் பொழுது மரங்கள் விழும் என்பதால் நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அரசு அதிகாரிகள் யாரும் விடுமுறை எடுக்க கூடாது என்றும் வெளியூர் செல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளராக தெரிவித்தார்.

கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பிரச்சினைகள் தொடர்பாக 24 மணி நேரமும் செயல்படும் வண்ணம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் தேவைப்படும் நேரங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும் என்றும் இன்று மாலை 5 மணி முதல் பொது போக்குவரத்து நிறுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும், பொதுமக்கள் தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டால் அவர்களுக்கு தேவையான அனைத்து விதமான உதவிகளும் செய்து தரப்படும் என தெரிவித்தார்.

Views: - 0

0

0