105-வது பிறந்தநாள் : எம்.ஜி.ஆர் சிலைக்கு புதுச்சேரி அதிமுக சார்பில் மரியாதை…

Author: kavin kumar
17 January 2022, 2:26 pm
Quick Share

புதுச்சேரி: எம்.ஜி.ஆரின் 105வது பிறந்தநாளையொட்டி புதுச்சேரி அதிமுக சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 105வது பிறந்தநாள் விழாவை தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர். இதனிடைய புதுச்சேரி அதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளையொட்டி புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள அவரது சிலைக்கு மேற்கு மாநில செயலர் ஓம்சக்திசேகர் தலைமையில் மேற்கு மாநில நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதேபோல் கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் கிழக்கு மாநில நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று சிலைக்கு மாலை அணிவித்து மரியதை செலுத்தினர். இதனிடையே கிழக்கு மாநில தேர்தல் பிரிவு செயலாளர் வையாபுரிமணிகண்டன் தலைமையில் முத்தியால்பேட்டை தொகுதியில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் தொகுதி அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Views: - 362

0

0