பள்ளிவாசலில் பக்ரீத் கொண்டாட்டம்.! தனி மனித இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் தொழுகை.!!

1 August 2020, 10:35 am
Pondy Bakrid - Updatenews360
Quick Share

புதுச்சேரி : பக்ரீத் பண்டிகையினையொட்டி 100க்கணக்கான பள்ளி வாசல்களில் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி தனி மனித இடைவெளிவிட்டு கலந்து கொண்டனர்.

தியாகத்தை நினைவு கூறும் வகையிலும், இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் கடமையை நிறைவேற்றும் நிகழ்வாக இந்த பக்ரீத் பண்டிகையை இஸ்லாமியர்கள் இன்று நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றார்கள்.

கொரோனா பொது முடக்க தளர்வுகளை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தளங்களும் திறக்கப்பட்டுள்ளதால் இந்த பக்ரீத் பண்டிகை தொழுகையை புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பள்ளிவாசல்களில் நடத்திக்கொள்ள அனுமதியும், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் புதுச்சேரி அரசு வெளியிட்டது.

அதன்படி பக்ரீத் பண்டிகையை யொட்டி புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரி ஈத்கா மசூதி, காரைக்காலில் உள்ள பெரிய பள்ளிவாசல்கள் உள்ளிட்ட 100க்கணக்கான பள்ளி வாசல்களிலும் நடந்த சிறப்பு தொழுகையில் புதுச்சேரி அரசின் வழிகட்டு நெறிமுறைகளின்படி தனிமனித இடைவெளி விட்டு ஏராளமான இஸ்லாமியர்கள் தொழுகையில் பங்கேற்றனர். முன்னதாக உடல் வெப்ப பரிசோதனை, முககவசம் அணிந்தவரை மட்டும் அனுமதிப்பது, அனைவரும் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டார்கள்.

இந்த பக்ரீத் பெருநாள் தொழுகையில் கொரோனா நோய் பாதிப்பில் இருந்து நாட்டு மக்கள் மீண்டு வரவும் நோய் தொற்று முற்றிலுமாக அகன்று மீண்டும் சகஜ நிலைக்கு மக்கள் திரும்பவும், கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்கள் ஆரோக்கியமாக வாழவேண்டும் என்ற பிரார்த்தனைகளும் அனைத்து பள்ளிகளும் நடைபெற்றது.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மாநில மக்களுக்கு ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Views: - 12

0

0