ஜிப்மர் மருத்துவமனையில் இனி இந்த கார்டு இருந்தால் மட்டுமே பிரீ ட்ரீட்மென்ட்…! விசாரணை நடத்த துணைநிலை ஆளுநர் அறிவுரை

Author: Udhayakumar Raman
24 September 2021, 8:00 pm
Quick Share

புதுச்சேரி: வருமான கோட்டிற்கு கீழ் உள்ள ரேஷன் கார்டு வைத்திருந்தால் மட்டுமே புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இலவச சிகிச்சை பெற முடியும் என்ற புதிய அறிவிப்பு பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜிப்மர் நிறுவனம் புதுச்சேரியில் கடந்த 1823ல் துவக்கப்பட்டது, தற்போது 2,300 படுக்கை வசதிகளுடன் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மருத்துவமனையாக ஜிப்மர் இயங்கி வருகிறது. தினமும் 8,000 வெளி நோயாளிகள், 2,000 உள்நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். 2006ஆம் ஆண்டு வரை முழுவதுமாக இலவச சிகிச்சை அளுத்து வந்த ஜிப்மர் மருத்துவமனை, 2006ல் மத்திய காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது பல்வேறு எதிர்ப்புகளை மீறி ஜிப்மர் நிர்வாணம் தன்னாட்சி நிறுவனமாக மாற்றப்பட்டது, அதன்பிறகு புதுச்சேரியின் வருமான உச்ச வரம்பு அடிப்படையில் மற்ற மாநிலத்தவர் உட்பட அனைவருக்கும் 2499 ரூபாய் கீழ் உள்ளவர்களுக்கு வருமானச் சான்றிதழ் சமர்ப்பித்தால் இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது,

இதில் தற்போது மாற்றம் கொண்டுவரப்பட்டு வருமான சான்றிதழுக்கு பதில் அனைத்து மாநிலத்தை சேர்ந்தவர்களும் இலவச சிகிச்சை பெற வருமான கோட்டிற்கு கீழ் உள்ள ரேஷன் அட்டையை அத்தாட்சியாக கொடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இது குறித்து ஜிப்மர் நிர்வாகம் துறைகளுக்கு அனுப்பியுள்ள சுற்றிக்கை, புதுச்சேரி மாநில வருமானம் அடிப்படையில் மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்களும் 2,499 ரூபாய் கீழ் சம்பாதிப்பவர்கள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களாக கருதப்பட்டு இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஜிப்மருக்கு பிற மாநிலத்தவர்கள் அதிக அளவில் சிகிச்சைக்கு வருவதால் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்ற மருத்துவமனையாக உள்ளது. எனவே அனைத்து மாநிலங்களிலும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு புறநோயாளிகள்சிசிச்சை பிரிவு, நோய் கண்டறிதல், இன்பிளான்ட் பிரிவில் இலவச சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளதாகவும்,

எனவே சிகிச்சை பெற வரும் பொதுமக்கள் தங்களது வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ரேஷன் அட்டையை அத்தாட்சியாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது, இத்திட்டம் வருகின்ற அக்டோபர் 1ம்தேதி முதல் அமலுக்கு வருகிறது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிப்மர் மருத்துவமனையில் 2,499 ரூபாய் மாதவருமானம் குறிப்பிட்ட அவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய நோயாளிகள் சிகிச்சை எடுத்து கொள்ள அனுமதிக்கப்படுவது வழக்கம். அதன் பின், வருமான சான்றிதழ் வருவாய் துறை அதிகாரிகளிடம் வாங்கி வந்து கொடுத்து தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜிப்மரின் இந்த புதிய அறிவிப்பால் இனி புதுச்சேரி மாநிலத்தில் சிவப்பு ரேஷன் அட்டை (வருமை கட்டுக்கு கீழ்) வைத்திருந்தால் மட்டுமே இலவசசிகிச்சை பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது, மஞ்சள் அட்டை வைத்துள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் இலவச சிகிச்சை பெற முடியாது.

இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், சிவப்பு அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இனி இலவச சிகிச்சை வழங்கப்படும் என்று ஜிப்மர் நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக, நாளிதழ்களில் இன்று வெளியாகி உள்ளது.இது குறித்து விசாரிக்கவும், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள நிலையைத் தொடர ஜிப்மர் நிர்வாகத்தை கேட்டுக் கொள்ளுமாறும் புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 231

0

0