புதுச்சேரியில் வேகம் எடுக்கும் கொரோனா : 20 ஆயிரத்தை தாண்டியது பாதிப்பு!!

15 September 2020, 12:14 pm
Puducherry Corona - updatenews360
Quick Share

புதுச்சேரி : கடந்த 24 மணி நேரத்தில் 380 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 20,601 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரியில் 270 நபர்களுக்கும், காரைக்காலில் 63 நபர்களுக்கும், ஏனாமில் 44, நபர்களுக்கும் மாஹேவில் 3 நபருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது..

இதில் 4674 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர், 15522 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுச்சேரியில் 10 நபர்களும், ஏனாமில் 1 நபரும் கொரோனா தொற்றால் உயிரிழந்ததை அடுத்து மாநிலத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 405 ஆக உயர்ந்துள்ளது..

தற்போது புதுச்சேரி மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்து 201 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார துறையினர் தெரிவித்துள்ளது.