திமுக முன்னாள் எம்.எல்.ஏ கொரோனாவுக்கு பலி!!

3 September 2020, 10:54 am
Pondy MNM Dead - Updatenews360
Quick Share

புதுச்சேரி : புதுச்சேரியின் மக்கள் நீதி மய்யத் தலைவர் டாக்டர். சுப்பிரமணியன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

புதுச்சேரி மக்கள்நீதி மய்யத்திம் தலைவரும் முன்னாள் சட்டமன்ற, உறுப்பினருமான டாக்டர் – சுப்பிரமணியன் (வயது 70) கடந்த 3 நாட்களுக்கு கொரோனா பாதிக்கப்பட்டு புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மறைந்த சுப்ரமணியன் 1985-90 வரை உருளையன்பேட்டை தொகுதியில் திமுக சட்டமன்ற உறுப்பினராகவும், 2001-2006 மற்றும் 2006-2011 முதலியார்பேட்டை தொகுதியில் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.

மேலும் 2012-2014 வரை திமுக அமைப்பாளராகவும் 2018ம் ஆண்டு முதல் மக்கள் நீதி மைய்யத்தின் மாநில தலைவராகவும் பதவி வகித்து வந்தார். அவரது மறைவு மக்கள் நீதி மய்யக் கட்சிக்கு பேரிழப்பாகவே கருதப்படுகிறது.

Views: - 0

0

0