திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா : முதலமைச்சரின் அலுவலருக்கும் உறுதி!!

24 August 2020, 10:39 am
Pondy Mla Corona - Updatenews360
Quick Share

புதுச்சேரி : திமுக எம்எல்ஏ சிவா, முதல்வரின் அலுவலக உதவியாளர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருகின்றது. புதுச்சேரியில் புதிதாக 412 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 522 அதிகரித்துள்ளது.

ஏற்கெனவே அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன், என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயபால் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இச்சூழலில் திமுக தெற்கு மாநில அமைப்பாளரும், எம்எல்ஏவுமான சிவாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி, ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அழைத்து செல்லப்பட்டார். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அலுவலக உதவியாளராக உள்ள அரியாங்குப்பத்தைச் சேர்ந்த பிரபுவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் அவருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அறிகுறி அற்ற கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவரை அரியாங்குப்பம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. முதல்வருக்கு உதவியாளராக செயல்பட்ட பிரபுவுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் முதல்வர் நாராயணசாமிக்கு மீண்டும் பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை முடிவு எடுத்துள்ளது.