புதுச்சேரியில் இன்று முதல் இ-பாஸ் ரத்து!!

23 August 2020, 11:03 am
Pondy E PAss cancel- Updatenews360
Quick Share

புதுச்சேரி : புதுச்சேரியில் இன்று முதல் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்றால் உலக நாடுகளே ஸ்தம்பித்தது. இந்த நிலையில் இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றை தடுக்க மாவட்டம் விட்டு மாவட்டம், மாநிலம் விட்டு மாநிலம் செல்ல தடை விதிக்கப்பட்டது.

மேலும் அத்தியாவசியத் தேவைக்காக, அவசரத் தேவைக்காக மட்டும் மாவட்டம் விட்டோ மாநிலம் விட்டோ செல்ல இ-பாஸ் நடைமுறையை மத்திய மாநில அரசுகள் கொண்டு வந்தன. இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு வருவதால் ஊரடங்கு விதிமுறைகளில் சில தளர்வுகளை மத்திய அரசும் மாநில அரசும் ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் நேற்று மாநிலம் விட்டு மாநிலம் செல்ல நடைமுறையில் இருந்த இ-பாஸ் முறையை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து இன்று புதுச்சேரி அரசு இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

பிற மாநிலங்களில் இருந்து புதுச்சேரி வருவதற்கும், புதுச்சேரியில் இருந்து பிற மாநிலங்கள் செல்வதற்கும் நடைமுறையில் இருந்த இ-பாஸ் முறையை புதுச்சேரி அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் வணிகம் செய்போரும், பணிக்கு செல்வோருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 14

0

0