கனமழை காரணமாக புதுச்சேரி சட்டப்பேரவை கட்டிடம் இடிந்து விபத்து!!

8 November 2020, 11:14 am
Pondy Secretariat - Updatenews360
Quick Share

புதுச்சேரி : கனமழை காரணமாக சட்டப்பேரவை வளாகத்தில் இடிவிழுந்து கட்டிடம் சேதமடைந்ததால் நிறுத்தப்பட்ட 4 க்கும் மேற்பட்ட கார்கள் சேதமானது.

புதுச்சேரியில் நேற்று இரவு நல்ல மழை பெய்தது. விடியற்காலை வேலையில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இடி மின்னல் காரணமாக புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் மேலே உள்ள நீர் தொட்டி இடி தாக்கி சேதம் அடைந்தது.

சேதமடைந்த செங்கற்கள் கீழே விழுந்தபோது சட்டப்பேரவை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் சட்டப்பேரவை தலைவரின் உதவியாளர் உள்ளிட்ட 4 க்கும் மேற்பட்ட கார்கள் சேதம் அடைந்தது. இதில் இரண்டு கார்களின் பின்பக்க கண்ணாடி முழுமையாக சேதம் அடைந்தது.

அதிர்ஷ்டவசமாக சட்டப்பேரவை வளாகத்திற்குள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. பலத்த மழை காரணமாகவும் இடியின் காரணமாகவும் சட்டப்பேரவை வளாகத்தில் ஒரு பகுதி சேதம் அடைந்து கார்கள் சேதம் அடைந்தது குறித்து சட்டப்பேரவை செயலர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Views: - 18

0

0