கொரோனா பரிசோதனை செய்யும் புதிய கருவி : புதுச்சேரி அமைச்சர் உத்தரவு!!

21 August 2020, 2:02 pm
Pondy Minister - Updatenews360
Quick Share

புதுச்சேரி : இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் புதியதாக கொரோனா பரிசோதனை செய்யும் கருவியை உடனடியாக வாங்க சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக கொரோனா பரிசோதனை அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் முடிவுகள் காலதாமதம் வருகிறது இதன் காரணமாக மேலும் தொற்று அதிகரித்து வருவதாக அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி இருந்தனர்.

இந்நிலையில் இன்று புதுச்சேரியில் உள்ள இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் மற்றும் சுகாதாரத்துறை செயலரும்- மாவட்ட ஆட்சியருமான அருண் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின்போது கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வந்தவர்களை காக்க வைக்காமல் உடனடியாக பரிசோதனை செய்து அனுப்ப மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார் தொடர்ந்து தற்காலிகமாக செவிலியர் மற்றும் மருத்துவர்களை உடனடியாக ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கவும் மேலும் கூடுதலாக பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் புதியதாக கொரோனா பரிசோதனை கருவியை உடனடியாக வாங்கவும் உத்தரவிட்டார்.

Views: - 31

0

0