இனிமேல் டீ குடிக்கும் கப்பையும் சாப்பிடலாம்! புதுச்சேரியில் அறிமுகம்!!

14 September 2020, 10:43 am
Tea Cup- updatenews360
Quick Share

புதுச்சேரி : பிளாஸ்டிக் டீ கப்பிற்கு பதிலாக வந்துள்ள பிஸ்கட் கப் டீ பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பொதுவாக டீ கடைகளில் கண்ணாடி டம்பர் மற்றும் ஒரு முறை பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக் கப் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு மாற்றாக புதியதாக பிஸ்கட் கப் தற்போது மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

புதுச்சேரியில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த பிஸ்கட் கப் வாடிக்கையாளர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த பிஸகட் டீ கப்பினால் சுற்றுச்சூழல் பாதிப்பு குறைந்துள்ளதாகவும், இதன் சுவையும் நன்றாக இருப்பதால் இந்த பிஸ்கட் டீ கப்பில் விரும்பி டீ அருந்துவதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது கொரோனா பரவல் காரணமாக கண்ணாடி டம்பரில் டீ அருந்துவதற்கு மக்கள் தயக்கம் காட்டுவதாகவும் தற்போது வந்துள்ள இந்த பிஸ்கட் டீ கப்பில் டீ அருந்தி விட்டு அந்த பிஸ்கட்டை வாடிக்கையாளர்கள் சாப்பிடுவதால் இதற்கு நல்ல வரவேற்பு இருப்பதாக தெரிவித்த அதன் விற்பனையாளர் இது போன்ற சிறு தொழில் செய்பவர்களுக்கு அரசு சலுகைகள் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Views: - 0

0

0